Sunday, April 7, 2013

கனவா ?? நினைவா ??


வானுயர்ந்த மரத்தின் மலர்கள்

பூமியின் மடியில் மலர் மஞ்சமாக

சுற்றிலும் படர்ந்திருந்த

புல்வெளி வெண்சாமரம் வீச

ஓடையின் சலசலப்பும்

வேணுகானமாய் இசைக்க

தென்றலும் தன் பங்கிற்கு

தண்மையை பரப்பிட

ஆனந்தமாய் சயனித்திருந்த

வேளையில் சடாரென்று

காதைக் கிழித்துக் கொண்டு

ஒலித்தது - வாகனங்களின்

ஹாரன் ஒலிகள் ……

திடுக்கிட்டு வாரிச்

சுருட்டிக் கொண்டு

எழுந்தபோது தான்

உணர்ந்தேன் படுத்திருந்தது

நெடுஞ்சாலையில் அமைந்திருந்த

தங்கும் விடுதியின்

ஐந்தாவது மாடியிலென்று !!!




6 comments :

  1. நல்ல கற்பனை சகோதரி...
    ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    ஆனந்த உறக்கம் ஆரத்தழுவக் கனவில்
    நீதுயின்ற இடம் நெடுஞ்சாலையானதோ...:)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி !!!

      Delete
  2. கனவை ரசித்தேன்...

    Visit : http://venkatnagaraj.blogspot.com/2013/04/9.html

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா !!!

      வெங்கட் நாகராஜ் ஐயா அவர்களது தளத்தில் அன்னம் விடு தூது கவிதை வரிசையில் எனது கவிதை பிரசுரமானதை அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல.

      Delete
  3. அருமையான கற்பனை வளம் .இன்றைய வாழ்க்கை
    இதுதானோ என்று வியக்க வைத்த வரிகள் .மிகவும்
    ரசித்தேன் தொடர வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி !!!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...