Sunday, August 6, 2017

நட்பு




சிறு புன்னகையே ஆரம்பமாய்
சில கையசைப்பும் தலையசைப்புகளே
காரணமாய் - மனமதில் காலத்திற்கும்
உறுதியாய் திகழவிருக்கும் உறவிற்கோர்
அடித்தளமாய் ! - சிறு பொறியென 
மனதிற்குள் விழுந்த நட்பு !
காலம் ஏற்றும் சுமையனைத்தும்
பனிப்பாறைகளாய் அழுத்த
பனிக்கடியில் கதகதப்பூட்டும்
வெப்ப அலைகளாய் - மனதின்
அடியாழத்துள் நினைவுகளாலேயே
மருந்திட்டு ஒத்தடம் கொடுக்கும்
இனிய நட்பு !

8 comments :

  1. நல்லதோர் கவிதை.. நட்பு தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நல்ல வரிகள்! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சகோதரரே.

      Delete
  3. Replies
    1. உண்மை தான் ஐயா. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  4. உண்மை எக்ஸ்பெயரி ஆகாத மருந்து

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...